வடகொரியா மீது அணு ஆயுத தாக்குதல் தொடுக்க அமெரிக்காவும் தயராக இருப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுக்கு தொல்லை தந்தால் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தார்.
ஆயுதங்களை இயக்கும் பொத்தான் தன் மேசையின் மீது தயராக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அமெரிக்காவிடமும் அணு ஆயுதங்களுக்கான பொத்தான் இருப்பதாகவும் அது வடகொரியாவிடம் இருப்பதை விட மிகப்பெரியது, வலிமை மிக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் டிரம்ப் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.