வடக்கு கிழக்கில் தமிழர் பகுதிகளில் வாக்கு கேட்கும் தேசிய கட்சிகள் அனைத்தையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
2018ம் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்காக தற்போது தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளான எம்மை அழித்த கட்சிகள் மட்டுமன்றி அழிவிற்கு காரணமான கட்சிகளையோ அல்லது அந்த அழிவினை நியாயப்படுத்தும் தென்னிலங்கைக் கட்சிக்களை கண்டிப்பாக புறக்கனிக்க வேண்டும். இருப்பினும் இவ்வாறான தென்னுலங்கை அரசியல் கட்சிகள் எமது வாக்குகளை சுதைப்பதில் முழுக் குறியாகவே உள்ளனர்.
இதன் காரணமாகவே எம்மவர.களில் இருந்து பெருமளவு வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளனர். இவ்வாறு களமிறக்கப்பட்டவர்கள் நிச்சயதாப வெல்லப்படப் போவது கிடையாது. இருப்பினும் எமது வேடபாளர்களின் வெற்றி வீத்த்தினை குறைக்கவே முடியும் அதாவது தேசியக் கட்சி வேட்பாளர்களின் உறவுகளில் சிலர் உறவுக்காக வாக்களிக்கும்போது இந்த நிலமை ஏற்படும். இதேநேரம் மேசியக் கட்சிகள் அதிக நிதிகளை கொண்டி செலவு செய்கின்றனர் எனில் அது எமக்கு செய்ய வேண்டிய கடன்போன்றதே
எனவே அனைவரும் தமிழ்த் தேசயக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து வலுப்படுத்த வேண்டும். அதுவே தற்போதைய வரலாற்றுக கடமையாகவும் வரலாற்றுப் பதிவாகவும் அமையும். என்றார்.