யாழ்ப்பாணம் அரியாலை தென்கிழக்கு-மணியந்தோட்டம் கிராம அலுவலரின் வீட்டுக்கு கற்கள் வீசி அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அரியாலை தென்கிழக்கு ஜே 89 கிராம அலுவலரின் வீட்டுக்கு நேற்றிரவு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கிராம அலுவலரால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அவரது வீட்டுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கிராம அலுவலரால் முறைப்பாட்டின் அடிப்படையில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.