வடக்கு இங்கிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 21 வயதுடைய இச்சந்தேக நபரை ஷெபீல்ட் (Sheffield) பகுதியில் நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேற்படி பகுதியிலுள்ள இரண்டு கட்டடங்களில் பொலிஸார் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பிரித்தானியாவில் இந்த வருடத்தில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற நிலையில், அச்சுறுத்தலான சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.