தொல் பொருட்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 50 ஆயிரம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ. மண்டாவல தெரிவித்துள்ளார்.
தொல் பொருட்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக 20 இலட்சம் ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை மறுசீரமைக்குமாறு தமது திணைக்களத்திற்கு அமைச்சர் யோசனை வழங்கியுள்ளதாகவும் மண்டாவல கூறியுள்ளார்.
இந்த திருத்தச் சட்ட மூலம் தற்பொழுது அமைச்சரவை மட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும் விரைவில் இந்த சீர்திருத்தம் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.