கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பியர்-39 என்ற சுற்றுலா தலம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அங்கு ஏராளமானோர் கூடுவார்கள்.
இங்கு தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது கலிபோர்னியா மாகாணம் மோடஸ்டோ பகுதியில் நடந்த சோதனையில் எவரிட் ஆரோன் ஜேம்சன் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பியர்-39 என்ற இடத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் .
ஐ.எஸ். ஆதரவாளரான ஜேம்சன் அமெரிக்க கடற்படையான மரைன் கார்ப்ஸ் படை பிரிவில் முன்னாள் ரரணுவ வீரராக இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்துமா நோய் பாதிப்பால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது லாரி ஓட்டுனராக இருக்கும் அவர் பியர்-39 சுற்றுலா தலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டு, தாமும் தற்கொலை செய்த கொள்ள திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் கூறியிருந்தார்.