அப்பிளின் பொருளை வாங்குவதைத் தூண்டும் வியாபார உத்தி!
அப்பிள் நிறுவனமானது, புதிய ஐ-போன்கள் வாங்குவதைத் தூண்டுவதற்காக பழைய ஐபோன்களின் வேகத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஐ-போன்களின் பயன்பாட்டுக்காலத்தை அதிகரிக்கும் போது, அதன் பேட்டரி திறன் அதிகளவில் செயற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ஐ-போன்களின் இயக்க வேகத்தைக் குறைப்பதை அப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், பழைய ஐ-போன்களின் பேட்டரியின் திறன் குறைவதால் அதற்கேற்றவாறு அதன் இயக்க வேகத்தைக் குறைப்பதாக அப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயமானது ‘ரெட்டிட்’ என்ற சமூக இணையத்தளத்தில் பயனர் ஒருவர் தனது ஐ-போனின் செயற்பாட்டு சோதனை முடிவுகளை வெளியிட்டவுடனே பலருக்குத் தெரியவந்தது.
அதாவது, ஐபோன் 6ளு மாடலை பயன்படுத்தி வந்த அவருடைய திறன்பேசியின் இயக்க வேகம் காலப்போக்கில் குறைந்துவிட்டது. ஆனால், அதன் பேட்டரியை புதிதாக மாற்றியவுடன் மீண்டும் அதன் வேகம் அதிகரித்துக் காணப்பட்டது.
‘நான் எனது சகோதரரின்ஐ-போன் 6 பிளஸ் மாடலை பயன்படுத்தியபோது அது என் மாடலைவிட வேகமாக செயற்படுவதை அறிந்தபோது இதில் ஏதோ பிழை இருப்பதுபோல் தோன்றியது’ என்று ரெட்டிட்டில் அவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.