கனடாவின் பிரபல தொலைக்காட்சி நெறியாளர் ஒருவர் சிறுத்தையை கொன்று, அதனுடன் செல்பியை எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Steve Ecklund என்னும் நபர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் அல்பெர்டா மலையில் கோகர் இன சிறுத்தையை கொன்று அதனுடன் செல்பி எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுமூக வலைதளங்களில் வைரலான அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக நாட்டின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மனைவி லாரன் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், மிகவும் அறுவருக்கத்தக்க இந்த செயல் கடும் கண்டனத்துக்குறியது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த செயல் ஆண்மையற்ற செயல் என்றும் பதிவிட்டுள்ளார்.அல்பெர்டா பகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் லாரன் இருப்பதால், அவரின் இந்த கண்டனத்தை பல்வேறு தரப்பினரும் ஷேர் செய்து வருகின்றனர்மேலும் பல்வேறு தரப்பு மக்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து Ecklund எந்த வருத்தமும் தெரிவிக்காமல் மாறாக கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.
அதில் தற்காத்துக்கொள்ளும் வகையில் அந்த விலங்கின் அனைத்து பகுதிகளையும் தான் பயன்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.