உ.பி.,யில், முதல்வர் வசிக்கும் பகுதிகளில், ‘செல்பி’ எடுக்க, மாநில அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு, அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
‘செல்பி’க்கு தடை:
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், முதல்வர் மற்றும், வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பு கருதி, அவர்கள் வசிக்கும் பகுதிகளில், பொதுமக்கள், ‘செல்பி’ எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதல்வரின் வீட்டிற்கு செல்லும் தெருமுனையில், இது குறித்த எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு பின், அந்த பலகை மட்டும் அகற்றப்பட்டு உள்ளது.
கண்டனம்:
மாநில அரசின் இது போன்ற உத்தரவுக்கு, சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி உள்ளிட்ட, முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அகிலேஷ் கிண்டல்:
‘முதல்வர் ஆதித்யநாத், மக்களுக்கு வழங்கும் புத்தாண்டு பரிசு இது’ என, அகிலேஷ் யாதவ், ‘டுவிட்டரில்’ கிண்டல் செய்துள்ளார்.