கடந்த 2007-ம் ஆண்டு, டேவிட் தவான் இயக்கத்தில், சல்மான் கான், கோவிந்தா நடிப்பில் வெளியான படம் பார்ட்னர்.
சல்மானின் சகோதரர் சோகைல் கான் தயாரித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க சோகைல் திட்டமிட்டுள்ளார்.
இம்முறை டேவிட் இப்படத்தை இயக்கவில்லை. மாறாக சோகைல் கானே இயக்கி, தயாரிக்க உள்ளார்.
முதல்பாகத்தில் நடித்த சல்மான், கோவிந்தாவே இரண்டாம்பாகத்திலும் நடிக்க உள்ளனர். தற்போது இதற்கான வேலைகள் ஆரம்பமாகி உள்ளன. விரைவில் படம் பற்றிய அறவிப்பு வெளியாகும் என தெரிகிறது.