பாலிவுட்டின் பிரபல நடிகை பிபாஷா பாசு. இவர், நடிகர் கரண் சிங் குரோவரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் பிபாஷா. இந்நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், இதை அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து பிபாஷா கூறுகையில், நான் கர்ப்பமாக இல்லை என்று தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என்னைப்பற்றி கர்ப்பமான செய்திக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று கூறியுள்ளார்.