யாழ்ப்பாணம் – நவாலி பகுதியைச் சேர்ந்த 72 வயதான வயோதிபர் ஒருவர் இன்று காலை முகம் கழுவச் சென்ற போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
காலையில் எழுந்த நேரத்தில் இருந்து காணாமல் போன அவரை, குடும்பத்தில் இருந்த மற்றையவர்கள் தேடிய போதே, அவர் கிணற்றில் விழுந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அயலவர்களின் உதவியுடன் அவரை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், அவர் அச் சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்ததாக, வைத்தியர் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்