தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா, தற்போது படவாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நிலையில் அவர் அடுத்ததாக காட்டேரியாக அவதாரம் எடுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
`யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் `காட்டேரி’ படத்தில் நடிக்க ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுந்தர்.சி. இயக்கத்தில் `அரண்மனை’ படத்தில் ஹன்சிகா பேயாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
`காட்டேரி’ படத்தில் வைபவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் காமெடி கலந்த த்ரில்லராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
ஹன்சிகா நடிப்பில் `குலேபகாவலி’ படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது.