பிரான்சில்இன்று அதிகாலை மூன்று மணிக்கு துலூஸ் நகரில், காவற்துறையினரின் துரத்தல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. காவற்துறையினர் சோதனைக்காக மறித்தபோது நிற்காமல் சென்ற ஒரு சிற்றுந்து காவற்துறையினரால் துரத்தப்பட்டுள்ளது.
காவற்துறையினரிடம் இருந்து தப்பிய குற்றவாளிகள், A68 நெடுஞ்சாலையில் தப்பியோடி உள்ளனர். இவர்களைக் காவற்துறையினர் தொடர்ந்து தரத்தி உள்ளனர்.
Albi-Toulouse திசையில் தப்பியோடிய குற்றவாளிகளின் சிற்றுந்து, கட்டுப்பாடின்றி விபத்திற்குள்ளாகியது. இதில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
துரத்தலிற்கான முக்கிய காரணங்கள், தப்பியோடியவர்கள் தொடர்பான தகவல்கள் என மேலதிக விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.