பரிசின் காட்டுப் பூங்காப் பகுதியான Bois de Boulogne இல் உடலத் துண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்றுச் சனிக்கிழமை, இந்தக் காட்டிற்குள் உடற்பயிற்சிக்காக ஓடச் சென்ற ஒருவரால் இந்த உடலத்துண்டங்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது தகவலினை அடுத்து அந்தப் பகுதியினைச் சுற்றி வளைத்த காவற்துறையினர், இந்த உடலத் துண்டங்களை மீட்டுள்ளனர்.
உடனடியாக இதற்கான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பரிசின் நீதிமன்றம், குற்றத்தடுப்புப் பிரிவினரிற்கு ஆணையிட்டுள்ளது.
தற்போதைக்கு இந்த உடலத் துண்ணடங்கள் தொடர்பான அடையாளங்களோ, அது ஆணா, பெண்ணா, என்ற தகவல்கள் கூட அறியப்படவில்லை எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த உடலத்துண்ணடங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி காவற்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியியானது இரவு நேரங்களில், சட்ட விரோதமாக, பெரும் பாலியற் தொழிற்சந்தையாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.