கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, நடனமாடியபடியே போக்குவரத்துக் காவலர் ஒருவர், முக்கிய சாலை ஒன்றில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விநோத சம்பவமானது, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் கடுமையான பணியை ஏன் நடனமாடியபடியே செய்யக்கூடாது என்று எண்ணிய அவர், பணியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டில் இருந்தே நடனமாடும் காவலராக புகழ் பெற்றுவிட்டார்.என்னதான் நடு வீதியில் நடனமாடினாலும், தன் கைகள் வாகனங்கள் செல்ல வேண்டிய திசை நோக்கியே இருக்கும் என்கிறார் இந்த நடனமாடும் சாண்டா கிளாஸ்.
இந்தியாவிலும் இவ்வாறாக நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பல போக்குவரத்துக் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.