இலங்கை தேர்தல் வரலாற்றில் 2018 ம் ஆண்டு உள்ளூராட்சி, நகர சபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வேட்பாளர்கள் அதிகமாக தேர்தலில் குதிக்கின்ற ஆண்டு என அடையாளப்படுத்த முடியும்.
சென்ற ஆண்டுகளில் மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களின் அனுதாப ஆண்டில் பேரியல் அஷ்ரஃப் போன்ற பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
பெண்கள் தமது கணவன்மார்களுக்காக வாக்கு கேட்கும் நிலை மாறி தனக்குப் போடுங்கள் என ஓட்டுப் பிச்சை கேட்கும் நிலை இவ்வாண்டு உருவாக்கப்படுள்ளது.
பரவா இல்லை . அது பொதுவாக ஒரு நாட்டின் ஜனநாயக அரசியல் நீரோட்டம் என நாம் வைத்துக் கொண்டு, இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றும் முஸ்லிம் பெண்கள் இது தொடர்பாக
பின்வரும் சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
(1). அல்குர்ஆனில் 33 அத்தியாயத்தில் :33 வது வசனமாக இடம் பெறும் பின்வரும் இறைக்கட்டளை மீறப்படுகின்றதா இல்லையா என சிந்திக்க வேண்டும்
وقرن في بيوتكن
பெண்களே உங்கள் வீடுகளில் தங்கி இருங்கள்.
ولا تبرجن تبرج الجاهلية الأولى
ஆரம்பகால ஜாஹிலிய்யாவில் போல் அலங்காரங்களோடு வெளியேறித் திரியாதீர்கள்.
மேற்படி குர்ஆனிய வசனம் பின்வரும் முக்கிய அம்சங்களைக் போதிக்கின்றது.
1) பெண்கள் வீட்டில் தங்கி வாழ வேண்டும்
இந்த வசனம் இறங்கியதும் நபித்தோழர்கள் அதை நடைமுறைப்படுத்துவதில் கவனமாக இருந்தார்கள்.
நபி ஸல் அவர்களின் மனைவி ஸவ்தா ரழி அவர்கள் கொழுத்த பெண்ணாக இருந்தார்கள். அவர்கள்தனது தேவைக்காக வெளியேறிச் செல்வதைக் கண்ட உமர் (ரழி) அவர்கள் ஸவ்தா ரழி அவர்களைக் கண்டித்தார்கள். அதனால் தமது அவசியத் தேவைகளின் நிமித்தமாக வெளியில் செல்ல அனுமதி கோரி வந்து நபி ஸல் அவர்களிடம் :
، فقالت: يا رسول الله، إني خرجت لبعض حاجتي، فقال لي عمر كذا وكذا، قالت: فأوحى الله إليه ثم رفع عنه، وإن العرق في يده ما وضعه، فقال: «إنه قد أذن لكن أن تخرجن لحاجتكن»
அல்லாஹ்வின் தூதரே! எனது சில தேவைகளுக்காக வெளியில் சென்றேன். எனக்கு உமர் ரழி அவர்கள் இப்படி இப்படி எல்லாம் சொன்னார் என முறையிட்ட போது
பெண்களே! உங்கள் தேவைக்காக வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: புகாரி)
2) பெண்கள் வெளியில் அலங்காரமாகத் திரிவது பிற ஆடவருக்கு பல்லிளிப்பது ஓட்டுக் கேட்டு ஊர்ஊராக அலைவது அனைத்தும்
ஜாஹிய்யாலாக் காலப் பழக்கமாகும்
எனவே இந்த இறைவசனத்தையும் கவனத்தில் செயலாற்றுவோம் .
(3) ஸஹாபாப் பெண்மணிகள் மஸ்ஜிதுன் நபவியில் பஜ்ர் தொழுகை முடிந்து செல்லும் போது எவ்வாறான அமைப்பில் காணப்பட்டனர் என்பதை பின்வரும் ஹதீஸ் பொடம் போடுகின்றது
٥٧٨ – حدثنا يحيى بن بكير، قال: أخبرنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال: أخبرني عروة بن الزبير، أن عائشة أخبرته، قالت: «كن نساء المؤمنات يشهدن مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر متلفعات بمروطهن، ثم ينقلبن إلى بيوتهن حين يقضين الصلاة، لا يعرفهن أحد من الغلس»
முஃமினான பெண்கள் நபி ஸல் அவர்களோடு பஜ்ர் தொழுகையில் தமது நீண்ட முந்தானைகளை அணிந்லது கொள்வார்கள். தொழுகை முடிந்ததும் பின்னர் மீண்டும் திரும்பிச் செல்வார்கள். அதிகாலையின் இருளால் அவர்களை யாரும் அடையாளம் காண முடியாது என நபித் தோழர்கள் குறிப்பிடும் செய்தி புகாரியில் இடம்பெறுகிறது .
இது அந்தப் பெண்மணிகள் ஊர் சுற்றித்திரியும் குருவிகள் அல்லர் என்பதையும் வீட்டில் தங்கி ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் என்பதையும் சுட்டிக் காட்டும் நிகழ்வாகும்.
குறிப்பு: அவசியபப்பட்ட தாதியர் சேவைக்காக
போர்காலத்தில் கலந்து கொண்டனர் என்பது தேர்தலில் பங்குபற்றலாம் என்பதற்கு போதுமான பலமான ஆதாரம் கிடையாது.
இதே நிலைதான் ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் கொள்ள வேண்டும். ஆர்ப்பாட்டம் ஜனநாயக வழிமுறையில் அனுமதிக்கப்பட்டது. ஜிஹாத் அல்லாஹ் தனது தூதருக்கு சொன்ன கட்டளை. அதில் கலந்து கொள்வோருக்கு தேவைப்படும் மருத்துவ உதவி வேண்டப்பட்டதே அன்றி பர்ள் அல்ல.
: لما بلغ رسول الله صلى الله عليه وسلم أن أهل فارس، قد ملكوا عليهم بنت كسرى، قال: «لن يفلح قوم ولوا أمرهم امرأة»
நபி ஸல் அவர்களிடம் பாரசீக மக்களை கிஸ்ரா மன்னனின் மகள் ஆட்சி அதிகாரம் செலுத்துவதாகச் செல்லப்பட்ட போது எந்த சமூகத்தைப் பெண் பொறுப்பேற்று நடத்துகின்றாரோ அந்த சமூகம் ஒருபோதும் வெற்றி பெறமாட்டார்கள்