பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கத்ரீனா கைப், தற்போது சல்மான் கான் உடன் டைகர் ஜிந்தா ஹே படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் டிச., 22-ல் வெளியாக இருப்பதால் புரொமோஷன் பணியில் பிஸியாக உள்ளார் கத்ரீனா.
இவரிடத்தில் பாலிவுட்டில் எந்த நடிகை உங்களை போன்று இருக்கிறார் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கத்ரீனா, ரேகா தான். அவர் மிகவும் அழகான, அற்புதமான சிறந்த நடிகை மற்றும் பெண். மாசுமரு அற்ற, எந்த குறையும் இல்லாத அழகானவர். அவர் என்று அழகு குறையாத, திறமையான நடிகை என்று கூறியுள்ளார்.