தமிழக ‘ஆல்–ரவுண்டர்’ வாஷிங்டன் சுந்தர், அறிமுகமானார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய 220வது வீரரானார்.
* தவிர இவர் (18 ஆண்டு, 69 நாட்கள்), குறைந்த வயதில் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இந்திய வீரர்கள் பட்டியலில் 7 வது இடம் பிடித்தார். முதலிடத்தில் சச்சின் (16 ஆண்டு, 238 நாட்கள்) உள்ளார்.
* வாஷிங்டன் சுந்தருக்கு, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஒருநாள் போட்டிக்கான தொப் பியை வழங்கினார்.
115
இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இந்த ஜோடி 12வது முறையாக ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 100 அல்லது அதற்குமேல் ரன்களுக்கு மேல் சேர்த்தது.
392
நேற்று இலங்கைக்கு எதிராக இந்திய அணி 392 ரன்கள் குவித்தது. இதன்மூலம் மொகாலி மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதற்கு முன், 2011ல் இங்கு நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 351 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.
* தவிர இது, இம்மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரானது. இதற்கு முன், 2007 ல் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கு நடந்த போட்டியில் 321 ரன்கள் எடுத்திருந்தது.
106
நேற்று, இலங்கையின் நுவான் பிரதீப் 10 ஓவரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 106 ரன்கள் வழங்கினார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் வழங்கிய பவுலர்கள் பட்டியலில், 3வது இடத்தை இந்தியாவின் புவனேஷ்வர் குமாருடன் (106 ரன், எதிர்: தென் ஆப்ரிக்கா, 2015, இடம்: மும்பை) பகிர்ந்து கொண்டார்.
முதலிரண்டு இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் லீவிஸ் (113 ரன், எதிர்: தென் ஆப்ரிக்கா, 2006, இடம்: ஜோகனஸ்பர்க்), பாகிஸ்தானின் வாகாப் ரியாஸ் (110 ரன், எதிர்: இங்கிலாந்து, 2016, இடம்: நாட்டிங்காம்) உள்ளனர்.