100 மீ., ஓட்டத்தில் பாண்ட்யாவை, ‘சீனியர்’ தோனி முந்தினார்.
இந்தியா, இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி, நேற்று மொகாலியில் நடந்தது. போட்டி 11:30 மணிக்கு துவங்கும் என்பதால், காலையில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய அணியின் 36 வயதான ‘சீனியர்’ வீரர் தோனி, 24 வயதான ‘ஜூனியர்’ பாண்ட்யாவும் 100 மீ., ஓட்டத்தில் பந்தயம் வைத்தனர். துவக்கத்தில் தோனியை விட பாண்ட்யா வேகமாக ஓடினார். கடைசியில் நம்ம ‘தல’ தோனி, பாண்ட்யாவை முந்தி, முதலிடம் பிடித்தார். அந்தளவுக்கு இன்னும் உடற்தகுதியுடன் உள்ளார் தோனி.