கத்தார் மற்றும் பிரான்ஸ் இரு நாடுகளும் இணைந்து 14 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான வர்த்தக மற்றும் இராணுவ உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவளிப்பதாக கூறி சவுதி அரேபியா மற்றும் அதன் பிராந்திய கூட்டணி நாடுகள் குற்றம் சுமத்தின.
மேலும் கத்தார் மீது நிலம், வான், கடல் ஆகிய மூன்று வழிகளிலும் சவுதி அரேபியா மறறும் கூட்டணி நாடுகள் முற்றுகையிட்டுள்ள நிலையில் கத்தார் அதனை மறுத்து வருகிறது.
இந்நிலையில் கத்தார்- பிரான்ஸ் இணைந்து 14 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான வர்த்தக மற்றும் இராணுவ உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
இரண்டு நாடுகள் இடையேயான வலுவான பிணைப்பை இந்த ஒப்பந்தம் அடிகோடிட்டு காட்டுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து 12 ரஃபேல் போர் விமானங்கள், கிட்டத்தட்ட 500 கவச வாகனங்கள் மற்றும் 50 ஏர் பஸ் பயணிகள் விமானங்களை பிரான்சிடம் இருந்து கத்தார் வாங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.