தமது ஒரே எதிர்பார்ப்பு ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்துவதே தவிர ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை வீழ்த்துவது அல்ல என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் கூறினார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனநாயக கட்டமைப்பை எற்படுத்துவதே ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சி என்றும், அதனை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கட்சியை பிளவுபடுத்தும் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சிக்கு இல்லை என்றும், அதனை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
சில அரசியல் கட்சிகளைப் போன்று மத பேதத்தை ஏற்படுத்தும் கொள்கையை ஐக்கிய தேசிய கட்சி பின்பற்றுவதில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.