நடைபெறவுள்ள உள்ளுராட்ச்சி மன்ற தேர்தல் சிறிய தேர்தல் ஒன்றல்ல என தெரிவித்துள்ள எல்லே குணவங்ச தேரர்,
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய தேர்தலுக்கான அத்திவாரமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சாட்சியங்கள் பொய்யானது என்பதோடு ஜெனீவா ஆணைக்குழுவும் பொய்யானது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் தற்பொழுதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.