பொதுபல சேனா போன்ற கடும்போக்கு சக்திகளுக்கு முஸ்லிம்கள் பதிலளிக்க அல்லது பதிலடி கொடுக்க விரும்பினால் ஆகக் குறைந்தது முஸ்லீம் உள்ளுராட்ச்சி மன்றங்களில் ஒரு JVP உறுப்பினரையாவது தெரிவு செய்யுங்கள் ..
இந்தத் தெரிவினூடாக
1 . முஸ்லிம் காங்கிரஸ், றிசாட் காங்கிரஸ், அதாஉல்லா காங்கிரஸ் களிலிருந்து முஸ்லிம்கள் விடுபட்டு நாட்டின் பெருந்தேசியத்தூடு முஸ்லிம்கள் இணைந்து கொள்கிறார்கள் என்ற சேதி சிங்களமக்களிடம் சென்றடையும் …
2. முஸ்லிகளின் உரிமைகளை விற்று பிழைப்பு வாதம் நடத்தும் காங்கிரஸ் காரர்களுக்கு இனி உள்ளச்சம் எடுக்கும்
3. முஸ்லிம்களுடைய நியாயங்களை முஸ்லீம் அரசியல் வாதிகள், அதிலும் குறிப்பாக சிங்கள மக்களால் அருவருப்புடன் நோக்கப்படுகின்ற முஸ்லீம் தலைவர்கள் கூறுவதை விட ஊழலற்ற, கை சுத்தமான திசாநாயக்க போன்ற நியாயமான சிங்களத் தலைவர்கள் கூறும் போது அது சிங்கள மக்களிடத்தில்
ஆழமாகச் சென்றடையும் …
4. தெற்கில் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு வீரமிக்க JVP பாதுகாப்பு அரணாக இருக்கும் .
5. SLFP, UNP போன்ற தேசியக்கட்சிகளை விட BBS போன்ற முரட்டுத்தனமான சிங்களக்கடும் போக்கை கையாள்வதற்கு JVP போன்ற தீரமான கடசிகளாலேயே முடியும் . மாத்திரமல்லாமல் இந்தக் கடும்போக்காளர்களை வளர்த்துவிடுவதில் UNP, SLFP போன்றவற்றின் மறை கரங்கள் இருப்பது நாம் அறியாத ஒன்றல்ல .
6. கிழக்கில் JVP ஊடாக முஸ்லீம் M.P யயோ அல்லது MPC யயோ தெரிவு செய்யும் அளவுக்கு பாமர முஸ்லீம் வாக்காளர்கள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை, ஆகவே சிந்திக்கின்ற மக்கள் ஒவ்வொரு முஸ்லீம் ஊரிலும் குறைந்தது ஒரு உள்ளுரடசி மன்ற உறுப்பினரை JVP ஊடாக தேர்வு செய்து தெற்கு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அல்லாஹ் முந்தி ரெண்டாவதாக உதவி செய்ய வேண்டியது பொறுப்பும் கடைமையும்.. இந்த சந்தர்ப்பம் இன்னும் 5 வருடங்களுக்கு பிறகுதான் கிட்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
7. முஸ்லிகளால் தெரிவு செய்யப்படட முஸ்லீம் அமைச்சர்கள் ஒதுங்கி ஒழிந்து நின்ற போது “அளுத்கம” முஸ்லிம்களுக்காக பாராளுமன்றத்தில் தனிப்பிரேரணை சமர்ப்பித்து அவர்களுக்காக வாதாடிய JVP தலைவரை மறந்து நீங்கள் முஸ்லீம்” காங்கிரஸ்களுக்கு” வாக்களித்ததற்காக இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்