நேபாளத்தில் பார்லிமென்ட், மாகாண சபைத் தேர்தகலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. நேபாள பார்லிமென்ட், 7 மாகாணப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த ௩ம் தேதி நடந்தது.
இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாயின. அந்நாட்டில், புதிய அரசியல் சாசனத்தின் கீழ் நடக்கும் முதல் பொதுத் தேர்தல் இது. அதை தொடர்ந்து தற்போது, நேபாளத்தில் பார்லிமென்ட், மாகாண சபைத் தேர்தல்களுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
நேபாளத்தில் மொத்தம் 5 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மாவட்டங்களில் 12, 235,993 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள்,மத்திய பார்லிமென்ட்டுக்கான 128 பிரதிநிதிகளையும் மாகாண சபைகளுக்கான 256 பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுப்பார்கள்.
தேர்தலுக்கு முந்தைய வன்முறை அதிகரிப்பதை தடுக்க, 45 மாவட்டங்களில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 65 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
இது தவிர, ராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள தேர்தல் முடிவுகளை இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கவனித்து வருகின்றன.
நேபாளத்தில் 2015 ஆம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்பட்டது. அதில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லையென, இந்திய வம்சாவளிகளான மாதேசி இனத்தவர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சாசனம் அமல்படுத்தட்ட பிறகு, அங்கு தற்போது நடைபெறும் தேர்தல் மிகப்பெரிய நடவடிக்கையாக உள்ளது.