சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த ராம் கோபால் வர்மா, என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கிறேன் என “லட்சுமியின் என்டிஆர்” பட அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த படத்தை தொடங்குவதற்கு முன்னதாக இப்போது நாகார்ஜூனா நடிக்கும் புதிய படத்தை தொடங்கியுள்ளார். ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜூனா போலீசாக நடிக்கிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நாகார்ஜூனாவுடன் தபு, அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகள் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த செய்தியை ராம் கோபால் வர்மா மறுத்துள்ளார். நாகார்ஜூனாவுடன் அனுஷ்கா, தபு நடிப்பதாக வெளியான செய்திகள் வதந்தி என்று மறுப்பு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதோடு, இந்த படத்தில் நாயகி வேடத்தில் மைரா ஷரீன் என்பவர் நடிக்கயிருப்பதாக சொல்லி அவரது போட்டோவை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.