உலகில் உள்ள பல நாடுகளில் விமானப்படையில் நடு வானில் எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட விமானங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் அது போன்ற விமானங்கள் இந்திய விமானப்படையில் இல்லை. அது குறித்து விமானப்படையினர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன் படி, டி.ஆர்.டி.ஓ. எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட போர் விமானத்தை உருவாக்கினர். அவாகஸ் சிஸ்டம் பொருத்தப்பட்ட இரண்டு விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு விமானங்களில் அவாகஸ் சிஸ்டத்தை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு முன் இருந்த அவாகஸ் மூலம் 240 கோணத்தில் மட்டுமே ஸ்கேன் செய்ய முடியும் . அதாவது முன்னால் மற்றும் பின்னால் வரும் வாகனங்களை கண்டுபிடிக்க முடியாது. தற்போது உருவாக்கியுள்ள விமானம் மூலம் 360 டிகிரி கோணத்தில் ஸ்கேன் செய்ய முடியும்.
விமானத்தில் ஏஇஎஸ்ஏ என்ற ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் எதிரிகளின் விமானம், வெடிகுண்டு மற்றும் ஏவுகணைகளை கண்டறிய முடியும். உலகில் இந்த சிஸ்டம் பொருத்தப்பட்ட விமானம் கொண்ட இரண்டாவது நாடு இந்தியாவாகும். இதற்கு முன் இஸ்ரேலில் விமானம் உள்ளது குறிப்பிடத்தக்கது.