அமெரிக்காவில், இந்தியாவைப் பூர்வீகமாக உடைய தம்பதியினர் தத்து எடுத்த, மூன்று வயது சிறுமி, இறப்பதற்கு முன், பல சித்ரவதைகள் செய்யப்பட்டுள்ளதாக, டாக்டர்கள் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியைச் சேர்ந்த, இந்தியாவைப் பூர்வீகமாக உடைய, வெஸ்லி மற்றும் சினி மேத்யூ தம்பதியினர், இந்தியாவில் இருந்து ஷெரின், 3, என்ற சிறுமியை தத்து எடுத்தனர். இந்தாண்டு அக்., 7ல், சிறுமி காணாமல் போனதாக கூறப்பட்டது. இதற்கிடையே, அந்த தம்பதி வசித்து வந்த பகுதிக்கு அருகில், ஒரு சிறு பாலத்தின் அடியில், சிறுமியின் உடல், அக்.22ல் கண்டுபிடிக்கப்பட்டது.
வெஸ்லி மற்றும் சினி மேத்யூ தம்பதி கைது செய்யப்பட்டு, வழக்கு நடந்து வருகிறது. உயிரிழந்த சிறுமி ஷெரின் உடலைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவளது கால்களில் பல்வேறு காலகட்டங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு, அவை காயமடைந்த நிலையில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
சிறுமி ஷெரின் சித்ரவதைக்கு ஆளாகியுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.