முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
கைது செய்யப்படலாம் என பல தரப்பினராலும் கடந்த நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அந்தவகையில், நுகேகெடை பெல்லன்வில விஹாரையில் நேற்று மாலை 6:30 அளவில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
குறித்த வழிபாடானது வியத்மக என்ற அமைப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
மேலும், இந்த பூஜையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.