கல்முனை விடயத்தில் பகிரங்கமாக கல்முனை முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் வாய் மூடி மௌனமாக இருக்கும் முஸ்லிம் காங்கிரசின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், மன்சூர், கல்முனை முன்னாள் மேயர் நிசாம் காரியப்பர், கிழக்கு சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், கல்முனை மாநகர முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கெதிராக கல்முனை மக்கள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன கூட்டம் நடத்த வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
கடந்த பொது தேர்தலின் போது உலமா கட்சி, ஹரீசை ஆதரிக்க தீர்மாணித்து அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்ட போது ஹரீசுக்கு மட்டுமே தமது கட்சி ஆதரவளிப்பதாக உலமா கட்சித்தலைவர் ஹரீசிடம் தெரிவித்தார்.
அதன் போது அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் மூவரும் ஒவ்வொருவருவருக்கும் தனியாக ஆதரவு தேடுவதை தவிர்க்கும் படி தலைமை சொல்லியுள்ளதால் எம் மூவரையும் ஆதரிப்பதே நல்லது என ஹரீஸ் கூறினார்.
இந்த நியாயத்தை ஏற்ற உலமா கட்சி மூவருக்குமான தனது ஆதரவை வெளியிட்டது.
இப்போது கல்முனை சாய்ந்தமருது பிரச்சினையில் ஹரீஸ் தவிர ஏனைய இருவரும் வாய் மூடி மௌனிகளாக இருப்பது ஏன்? இத்தொகுதி மக்களும் வாக்களித்துத்தான் இருவரும் எம் பியாகி ஒருவர் பிரதி அமைச்சராகவும் இருக்கிறார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குஞ்சி குருமணியெல்லாம் முஸ்லிம்கள் கல்முனையை ஆக்கிரமிக்கிறார்கள் என்றும் எல்லைகளை திரிபு படுத்தியும் றிக்கைகள் விடும் போது முஸ்லிம்களின் வாக்கு பெற்ற இந்த இரு எம் பிமாரும் ஏன் இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.?
ஆகக்குறைந்தது கல்முனையை மூன்றாக அல்லது 1987ம் ஆண்டின் கல்முனை எல்லையின் படி பிரித்து சாய்ந்தமருதுக்கும் சபை கொடுங்கள் என ஒரு வார்த்தை சொல்வதற்குக்கூட இவர்களுக்கு முது கெலும்பு இல்லையா?
கல்முனை மக்கள் வாக்களிக்காத அதாவுள்ளா கல்முனைக்காக பேசும்போது இந்த இருவரும் ஏன் ஒளிந்திருக்கின்றனர்?
ஆகவே கல்முனை முஸ்லிம்கள் இந்த இரண்டு எம் பீக்களுக்கும் எதிராகவும் ஏனைய கோழைத்தனமான மாகாண சபை உறுப்பினர்கள், பழைய மேயர், முன்னால் உறுப்பினர்களுக்கும் எதிராக உடனடியாக கல்முனையில் பகிரங்க கண்டன கூட்டம் நடத்த முஸ்லிம் மக்கள் முன் வர வேண்டும்.