காலி – கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் தொடர்பில், கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் மீண்டும் தெரிவித்துள்ளது.
சில சமூக வலைத் தலங்களின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில், தொடர்ந்தும் பொய்யான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொது மக்கள் மத்தியில் அசாதாரண நிலையை தோற்றுவிப்பதே இதன் நோக்கம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்