மன்னார் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரச காணிகளில் வனவளத்திணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஆகியோரின் பிடியில் இருப்பவற்றை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் பொரளஸ் தலமையில் ஆய்வுகளை மேற்கொண்டும் உரிய நிலங்கள் மட்டும் விடுவிக்கப்படவில்லை என கவலை தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிலங்கள் தொடர்பில் கடந்த செப்ரெம்பர் மாதம் 9,10,11ம் திகதிகளில் ஜனாதிபதி செயலணியின் தலைவர் , மீள்குடியேற றச் செயலணியின் ஆலோசகர் உள்ளிட்ட ஐவர் அடங கிய குழுவினர் முன்னிலையில் பிரதேச செயலாளர் , வனவளத் திணைக்கள அதிகாரிகள் , வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் , கிராம அபிவிருத்திச் சங்கங்கள், காணி உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட கூட்டங்களில் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பாப்பாமோட்டை முதல் தேவன்பிட்டி வரைக்குமான மக்களின் வாழ்வாதார நிலத்தினை வன ஜீவராசிகள் திணைக்களம் வர்த்தகமாணி மூலம் அபகரித்தமையினால் மக்களிற்குச் சொந்தமான 3 ஆயிரத்து 150 ஏக்கர் நிலமும் யுத்தம் காணரணமாக காடுவளர்ந்த நிலையில் வனவளத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்ட 2 ஆயிரத்து 150 ஏக்கர் நிலத்துடன் , பரப்புக்கடந்தானில் 250 குடும்பங களிற்கு அரை ஏக்கர் வீதம் வழங கப்பட்ட நிலமான 125 ஏக்கரை ஓர் தனியார் அபகரித்துள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேபோன்று மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் கடற்கரையோரங்களை வன ஜீவராசிகள் திணைக்களம் வர்த்தகமாணி அறிவித்தல் ஒன்றின் பிரகாரம் சுவீகரித்துள்ளதனால் மீனவர்கள் பெரும் நெருக்கடியை எதிர் கொள்வதான முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இவ்வாறு ஆராயப்பட்ட பகுதி சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பு ஆகும்.
குறித்த கடற்கரைப்பகுதிகளை வனஜீவராசி திணைக்களம் உரிமைகோருவதனால் மீனவர்களிற்கான மேம்பாடுகள் தடைப்படுவதாகவும. குறிப்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவில் மன்னாரில் 8 இறங்குதுறை புனரமைப்பிற்கு நிதி அனுமதிக்கப்பட்டபோதும் 4 இறங்குதுறை பிரதேசம் வனஜீவராசி திணைக்களம் உரிமைகோரும் பகுதிக்குள் அகப்பட்ணமையும் அபிவிருத்திக்குத் தடையாகவுள்ளது தொடர்பிலும் சுட்டிக்காட்டினர்.
இவற்றின் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 5 ஆயிரத்து 425 ஏக்கர் நிலத்திற்கான விடயமும் மன்னாரில் 2 ஆயிரம் ஏக்கர் தொடர்பிலும் ஆராயப்பட்டதோடு குறித்த நிலங்களையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்
இதில் பரப்புக்கடந்தான் கிராமத்தில் 2011ம் ஆண்டில் தனி ஒருவரினால் சுமார் ஆக்கிரமித்த 125 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கப்பட்டு சுற்று வேலி அமைத்து பெரியதோர் பண்ணை நடாத்தி வருகின்றார். இவ்வாறு நடாத்துபவரின் பெயரில் நூறு ஏக்கருக்கான காணி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வழக்கு இடம்பெறுவதனால் அதனை சட்டப்பிரகாரம் அனுகுவதாக முடிவெடுக்கப்பட்டது.
இநேநேரம் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் பிடியில் உள்ள காணிகள் தொடர்பில் ஆய்வின் முடிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அறிக்கையிட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துச் சென்றனர். இருப்பினும் ஆய்வுகள் இடம்பெற்று 4 மாதங்கள் கடந்தபோதும் ஆய்வின் முடிவோ அல்லது நிலமோ கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்