அரசாங்கத்தின் ஆட்சியைப் பிடிப்பதற்கு அளுத்கம தர்காநகர் சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்தியது போல கிந்தொட்ட சம்பவத்தையும் எமக்குக் குறிப்பிடலாம் எனவும், ஆனால், தாம் அவ்வாறு செய்யப் போவதில்லையெனவும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
எமது அரசாங்க காலத்தில் சிங்கள – முஸ்லிம் மோதல் இடம்பெற்றதாக குற்றம்சாட்டினர். ஆனால், இன்றும் அது இடம்பெறுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தி அதிகாரத்தைப் பெற வேண்டும் என்ற தேவை கிடையாது. அப்படியான நடவடிக்கைகளை நாம் அனுமதிப்பதும் இல்லை.
ஆனால், ஐ.தே.க. இன்று இதனைச் செய்கின்றது. அன்று ஐக்கிய தேசியக் கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் மீது குற்றம்சுமத்தியது போன்று இன்று எமக்கும் குற்றம்சுமத்த முடியும் எனவும் ஊடகங்களிடம் கிந்தொட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் நேற்று இதனைக் கூறினார்.