பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அரசாங்கம் அவற்றுக்கு செவிசாய்க்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார சேவை உட்பட 18 தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் நாளை மறுநாள் (22) நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் 22 ஆம் திகதி காலை 7.00 மணி முதுல் 23 ஆம் திகதி காலை 7.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டுத் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.