யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக 150 மில்லியன் ரூபாவை வழங்கி நோர்வே அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ஜோன் சொரென்ஸ்டன் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.