நியுசிலாந்தின் குயின்ஸ்டவுன் பகுதியில் வசிக்கும் இலங்கைக் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தாய், தந்தை மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகள் ஆகியோர் எதிர்வரும் 21ம் திகதி நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2010ம் ஆண்டு தம்பதியர் இருவரும் நிபுணத்துவ பணியாளர்களுக்கான வீசா கிடைக்கப்பெற்று நியுசிலாந்தில் குடியேறியுள்ளனர்.
அவர்களில் டினேசா என்ற பெண்ணுக்கு தற்காலிக நிபுணத்துவ வீசாவே கிடைக்கப் பெற்ற நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்து ஒன்றில் உபாதைக்கு உள்ளானார்.
இந்தநிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அவரால் தொழிலில் ஈடுபட முடியாமல் போனது.
எனவே அவரும், அவரது குடும்பத்தாரும் நாடுகடத்தப்படவுள்ளதாக நியுசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவர்கள் கடந்த 2013ம் ஆண்டு, நியுசிலாந்தில் குடியேற்றத்துக்கான அனுமதி கோரி அவர்கள் விண்ணப்பித்த போதும், அந்த விண்ணப்பம் இன்னும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.