பலாங்கொடை – ஹபுகாஹகும்புர பிரதேசத்தில் வளவை கங்கையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஆணொருவரின் சடமொன்று இன்று மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்டவர் பண்டாரவளையை சேர்ந்த திஸாநாயக்க முதியன்சலாகே சந்திரபால என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை (வயது 49) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் கடந்த சில தினங்களாக காணாமல் போயுள்ளார் என அவரின் உறவினர்கள் எல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சடலம் இருந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.