திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்தை பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து ஆறு வயது மாணவனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போகாவத்தை தோட்டத்தைச் சேர்ந்த, தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய ராஜேந்திரகுமார் அஸ்வின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 5 மணிமுதலில் இருந்து சிறுவனை வீட்டில் காணாததால் உறவினர்களும், தோட்ட மக்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர், இதன்போது குறித்த சிறுவன் வீட்டின் அருகில் உள்ள போகாவத்தை ஓயாவில் சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் கொய்யாபழம் பறிக்க சென்றபோது தவறி ஆற்றில் வீழ்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின்னர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.