அமெரிக்க அதிபர் தேர்தலில்,ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்று குற்றச்சாட்டப்படுள்ளது குறித்து, அதிபர் புதின் அவமானமாக உணர்ந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வியட்நாமில் நடந்த ஆசிய-பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் அவரை சந்தித்த பிறகு டிரம்ப் இதை தெரிவித்துள்ளார்.
“நீங்கள் பலமுறை கேட்க மட்டுமே முடியும், நிச்சயமாக அமெரிக்க தேர்தலில் அவர் குறுக்கிடவில்லை என்று தெரிவித்துள்ளார்,” என்று அதிபர் டிரம்ப் கூறினார்.
அந்த தேர்தலில், புதின் குறுக்கிட்டதாக கூறப்படுவதை அபத்தம் என பிறகு குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் குறுக்கீடு மற்றும், டிரம்ப் குழுவினரின் உள்கூட்டுகள் குறித்து நீதித்துறை விசாரித்து வருகிறது. தேர்தல் முடிவுகளை மாற்ற ரஷ்யா முயன்றதாக அது குறித்து விசாரிக்கும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே முடிவு செய்துள்ளன.
நீண்ட காலமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேசாமல் இருந்ததற்காக தான் வருத்தப்பட்டதாக கூறியுள்ள புதின், “இருவரும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையே உள்ள உறவு நெருக்கடியில் இருந்து இன்னும் மீளவில்லை,” என்பதையே காட்டுகிறது என்று புதின் கூறியுள்ளார். இந்த மாநாட்டின்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே இருதரடப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ரஷ்ய தலையீடு குறித்து ஏற்கனவே அமெரிக்காவில் நடந்து வரும் விசாரணைகளில் டிரம்பின் பல்வேறு முன்னாள் முக்கிய உதவியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜார்ஜ் பாப்புடோபோலஸ் என்ற டிரம்பின் முன்னாள் ஆலோசகர், ரஷ்யாவை சேர்ந்த அதிகாரிகளை சந்தித்த காலம் குறித்து எஃப்.பி.ஐயிடம் பொய்யான தகவல் கூறிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தேர்தலுக்கு தொடர்பில்லாத ஆனால், இந்த விசாரணைக்கு தொடர்புடைய வழக்கிற்கான, டிரம்பின் முன்னாள் பிரச்சார மேலாளரான பால் மான்ஃபோர்ட் மற்றும் அவரின் கூட்டாளி, பணம் கையாடல் செய்த குற்றத்திற்காக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
டா நாங்கில் நடைபெற்ற ஆசிய- பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், ரஷ்ய தலைவர் புதினுடன், இரண்டு அல்லது மூன்று முறை சந்தித்து பேசியதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
“அவர், அதில் குறுகிடவில்லை என தெரிவித்தார். நான் மீண்டும் கேட்டேன், குறுக்கிடவில்லை என்றே தெரிவித்தார், ” என்று ஹனோய்க்கு செல்லும் போது, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செல்லும் போது அதிபர் டிரம்ப் கூறினார்.
“இதனால் புதின் மிகவும் அவமானபடுத்தப்பட்டதாக உணர்ந்தார், அது நம் நாட்டிற்கு நல்லது கிடையாது, ” என்று தான் நம்புவதாக கூறினார்.
அதிபர் டிரம்பின் பிரச்சாரக் குழுவுடன், ரஷ்ய தலையீடு உள்ளதாக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கற்பனையே என்று பின்னர் புதின் தெரிவித்தார்.
“அமெரிக்காவில், ரஷ்யாவின் தலையீடு உள்ளது என்று கூறப்படும் அனைத்துமே, அந்நாட்டில் தொடரும், உள்நாட்டு அரசியல் சண்டைகளின் வெளிப்பாடு, ” என புதின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.