கண்டியில், பெண்களை பாலியல் தேவைகளுக்காக விற்பனை செய்துவந்த நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர். அதன்போது, நான்கு பெண்களும் அவர்களுக்குக் காவலாக இருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 24 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.இந்த நிலையத்தின் உரிமையாளர் தற்போது தலைமறைவாக இருப்பதாகத் தெரியவருகிறது.
உரிமையாளர், கணவர்களைப் பிரிந்து வாழும் பெண்களுடன் நட்பை ஏற்படுத்தி அவர்களைக் காதல் வலையில் விழ வைத்து தம்முடன் அழைத்து வந்து பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
மேலும், பெண்கள் ஒவ்வொருவரையும் எட்டாயிரம் ரூபா முதல் பத்தாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்தும் வந்துள்ளார்.
பெண்களுக்குக் காவலாக இருந்த நபர், ஏற்கனவே கொலை வழக்கொன்றில் தண்டனை பெற்றவர் என்றும் தெரியவந்துள்ளது.
இது குறித்த முழுமையான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.