குறைந்த விலையில் நுகர்வோருக்கு தேங்காயை வழங்குவதற்கு சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 65 ரூபாவுக்கு சதொசவில் தேங்காய் பெற்றுக் கொள்ள முடியும் என சதொச தலைவர் ஆர்.ரி.எம்.கே.பீ. தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதற்காக வேண்டி 12 லட்சம் தேங்காய்களை நாட்டிலுள்ள சதொச களுக்கு விநியோகிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.