நான் அர்ஜுன ரணதுங்க அவர் சும்மா தயாசிறி மாத்திரமே என பெற்றோலிய வளத் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த ஒரு வாரகாலமாக ஏற்பட்ட ஏற்பட்ட பெற்றோல் நெருக்கடி குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அர்ஜுன இவ்வாறு கூறியுள்ளார்.
அர்ஜுன ரணதுங்கவுக்கு பெற்றோல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முடியாத நிலையில், விளையாட்டுத் துறையில் காணப்படும் பிரச்சினையைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கின்றார். முதலில் பெற்றோல் பிரச்சினை ஏற்படாமல் அவர் பார்த்துக் கொள்ளட்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
தயாசிறி அவ்வாறு சொல்வதற்கு அருகதையுள்ளது. ஏனெனில், அவர் சிறந்ததொரு கிரிக்கெட் வீரர். அவருக்கு நல்லாக விளையாட்டைப் பற்றித் தெரியும்.
அவர் கூறும் கருத்துக் கெல்லாம் நான் பதிலளிக்க வேண்டும் என்ற தேவையில்லை. நான் அர்ஜுன ரணதுங்க, அவர் வெறும் தயாசிறி எனவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.