ஹர்திக் பாண்டியாவின் பணிச்சுமையைக் கவனத்தில் கொண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக நவம்பர் 14-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி முதல் கடைசியாக நடைபெற்ற 33 போட்டிகளில் 30 போட்டிகளில் பாண்டியா ஆடியுள்ளார். ஜூன் மாதம் முதல் அவர் ஒருநாள் போட்டிகளில் 147 ஓவர்களை அவர் வீசியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான அறிமுகப் போட்டியில் அரைசதமும், பிறகு பல்லெகிலேயில் சதமும் அடித்தார் பாண்டியா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றவர் பாண்டியா.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
விராட் கோலி, கே.எல்.ராகுல், முரளி விஜய், ஷிகர் தவன், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இசாந்த் சர்மா.