பிறப்பில் சிறுநீரக கோளாறு இருந்தமையினாலேயே குழந்தை மரணித்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஹரித்த தென்னகோன் தெரிவித்தார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் 02ம்திகதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய் 03ம் திகதி சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றடுத்து 04ம் திகதி வைத்தியசாலையை விட்டு வீட்டிற்கு சென்று 10 நிமிடத்திற்குள் குழந்தை மயக்கமுற்ற சம்பவம் குச்சவௌி பொலிஸ் பிரிவிலுள்ள இறக்கக்கண்டி பகுதியில் நேற்று (04) பிற்பகல் 3.30மணியளவில் பதிவாகியுள்ளது.
குழந்தை பிறந்து வீட்டிற்கு கொண்டு சென்று கட்டலில் வைத்து உறவினர்களால் பார்த்துக்கொண்டிருக்கும் வேளை குழந்தை மயக்கமுற்றதை அவதானித்த உறவினர்கள் உடனடியாக நிலாவௌி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அதேநேரம் குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியரினால் கூறப்பட்டதையடுத்து உறவினர்களிடம் விசாரணை செய்த போது குழந்தை திருகோணலை பொது வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வேளை நன்றாக இருந்ததாகவும் பின்னர் மயக்கமுற்றதாகவும் ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலை தரப்பினர் குச்சவௌி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குழந்தையை பொலிஸார் சட்ட வைத்திய பரிசோனைக்காக உட்படுத்துவதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இக்குழந்தையின் மரணத்தில் சந்தேகம் கொண்டதையடுத்து இன்றைய் தினம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக உட்படுத்திய போதே இக்குழந்தையின் பிறப்பிலேயே சிறு நீரக கோளாறு இருந்திருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஹரித்த தென்னகோன் மேலும் தெரிவித்தார்.