சமீபத்தில் கந்து கொடுமையால் இசக்கிமுத்து குடும்பம் நெல்லை ஆட்சியல் அலுவலகத்தில்வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. இது தொடர்பாக கார்டூன் ஒன்றை வரைந்திருந்தார்.பாலா இந்நிலையில், சென்னை போரூரை அடுத்த பெரியபணிச்சேரி இல்லத்திற்கு வந்த சீருடை அணியாத நான்கு காவலர்கள் அவரை தர தரவென இழுத்துச் சென்றார்கள். அவருடைய கார்டூன் மீது புகார் இருந்தால் வழக்குத் தொடருங்கள். இது முறையல்ல என்று சொன்ன போதும் அவரது மனைவி உள்ளிட்டவர்களை தள்ளி விட்டு விட்டு தர தரவென இழுத்துச் சென்றார்கள். ஒரு பெண் போலீசும் உண்டு. நெல்லை மாவட்ட ஆட்சியர் இசக்கிமுத்து கார்டூன் தொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் அந்த புகாரின் பேரிலேயே அழைத்துச் செல்வதாகவும் போலீசார் . அநாகரீகமான முறையில் கார்டூனுக்காக ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.