தமிழரசுக்கட்சியுடன் இணைவும் இல்லை கூட்டமைப்பிலிருந்து விலகலும் இல்லை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணணி
தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமைய நேற்றைய(4) சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிறகு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறி அக் கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி செயற்பட்டு வரும் நிலையில் இனிமேலும் அக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டால் அது தமிழ் மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாக அமையும்.
ஆகையால் அக்கட்சிச் சின்னத்தில் இனிப் போட்டியிட முடியாது. பொதுவான கொள்கையுடன் பொதுச் சின்னத்தில் செயற்பட விரும்புகின்ற எவருடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி வெளியேறவில்லை. கூட்டமைப்பில் இருக்கின்ற தமிழரசு கட்சியுடனேயே இணைந்து செயற்படப் போவதில்லை. அக்கட்சி சின்னத்திலும் இனி போட்டியிடப் போவதில்லை.
தமிழரசு கட்சியானது தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இடைச் செருகல் கட்சியாகவே வந்து சேர்ந்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேச அக் கட்சிக்கு உரித்து இல்லை என தெரிவித்துள்ளார்.