கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்காடு மையவாடிக்கு இடைப்பட்ட பகுதியில் பணத்துக்கு சூது விளையாடிய நான்கு பேர் இன்று(03) ஒரு தொகைப் பணத்துடன் கைது செய்யப்பட்டதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ஐந்துபேர் கொண்ட குழுவினர் தெரிவித்தனர்.
பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்தே சுற்றிவலைப்பின்போது இவ்வாறு அப்பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திரூகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு இச்சுற்றி வலைப்பில் ஐந்து பேர்கொண்ட குழுவினரான 12793 இலக்கத்தையுடைய திரு.அத்துகொரல,53876 தௌபீக்,53884 மஹ்ரூப்,79129 வன்னி நாயக்க , 13675 இந்திக உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட சுற்றிவலைப்பில் இவர்களை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் கிண்ணியா பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.