அமெரிக்காவின், நியூயார்க் நகரில், சாலையில் சென்றவர்கள் மீது, டிரக் மோதியதில், எட்டு பேர் பலியாகினர். டிரக்கை ஓட்டி சென்ற, சைபுல்லோ சைபோவ், 29, என்பவனை, போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, சைபோவிடம் விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது: உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த சைபோவ், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு, நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டான். அதன்படி, சமூக வலைதளங்களில், பயங்கரவாதிகளின் சதி செயல்கள் பலவற்றை பார்த்து, டிரக் ஏற்றி எட்டு பேரை கொன்றான். தான், ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவன் என்பதை, ஒப்புக் கொண்டுள்ளான். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், ஐ.எஸ்., அமைப்பின் கொடியை பறக்கவிடும்படி, அவன் கூறினான்.இவ்வாறு போலீசார் கூறினர்.