கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க விமானப்படையின் சூப்பர்சோனிக் குண்டு வீச்சு விமானங்களும், ஜப்பான் விமானப்படை விமானங்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், ஹைட்ரஜன் குண்டையும் வடகொரியா கடந்த ஜூலை முதல் அடுத்தடுத்து சோதனை செய்தது.
இதனால், வடகொரியாவை மிரட்டும் வகையில் கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா,தென்கொரியா, ஜப்பான் நாட்டு போர்க்கப்பல்கள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. விமானப்படையின் இரண்டு சூப்பர்சோனிக் பி-1பி லான்சர் ரக குண்டு வீச்சு விமானங்களும், ஜப்பான் விமானப்படை விமானங்களும் கொரிய தீபகற்ப பகுதியில் நேற்று கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன.
அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் நேற்று தனது ஆசிய பயணத்தை தொடங்கினார். ஜப்பான், தென்கொரிய, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அவர் செல்கிறார். அவரது பயணத்துக்கு முன்பாக அமெரிக்க குண்டு வீச்சு விமானங்கள், கொரிய தீபகற்ப பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டன.