மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு அரசாங்கம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.